கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பக்க வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

திருத்தப் பணிகள் காரணமாகவே இவ்வாறு தற்காலிகமாக மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள, வாகனங்களின் வேகத்தை மட்டுபடுத்தி, ஒரு பக்க பாதையில் பாதுகாப்பாக வாகனங்களைச் செலுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)