பிட்டிகல – தல்கஸ்பே பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டதுடன், சம்பவ இடத்தில் 6 பேர் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)