நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவிற்கு சமீபத்தில் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்து கொண்டார்.

இதையடுத்து மருந்து விற்பனை செய்யும் தொழிலதிபராக இருக்கும் விசாகனுடன், தனது புதிய மண வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இவர்களுக்கு கடந்த 11ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது.

இதில் சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது பேரனுடன் சேர்ந்து ரஜினிகாந்த் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலானது. இந்நிலையில் புதுமணத் தம்பதி சவுந்தர்யா – விசாகன் பனி படர்ந்த ஐஸ்லாந்திற்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.

தாங்கள் ஐஸ்லாந்தில் இருப்பதை உறுதி செய்யும் வண்ணம், அங்கிருந்து சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதன்மூலம் இருவரும் மிகுந்த உற்சாகமாக பொழுதைக் கழித்து வருவது தெரிகிறது.

அதேசமயம் தனது மகன் வேத், சென்னையில் இருப்பதால், அவனை மிகவும் மிஸ் செய்வதாக சவுந்தர்யா பதிவில் குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கு பலரும் புதிய வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)