தாயில் கருவில் குழந்தை உருவாகும் போது, அதனைச் சுற்றி நீர்க்குடம் அமைந்திருக்கும். இது வெளிப்புறச் சூழல்களில் இருந்து குழந்தையை பத்திரமாக பாதுகாக்கும். குழந்தைப் பிறக்கும் போதுஇ இந்த நீர்க் குடம் உடைந்து குழந்தை வெளியே வரும்.

இந்நிலையில் நீர்க் குடம் உடையாமல் குழந்தை வெளியே வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியுமா? நம்ப முடியவில்லை தானே. அப்படியொரு நிகழ்வு தற்போது நிகழ்ந்துள்ளது.

பிரேசில் நாட்டின் எஸ்பிரிடோ சாண்டோ மாகாணத்தில் விலா வெல்ஹா என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள பிரையா டா கோஸ்டா மருத்துவமனையில் மானிக் வலஸ்கோ என்ற கர்ப்பிணி பெண் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவருக்கான பிரசவ நேரம் வந்தது.

இதற்காக மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், நீர்க் குடம் உடையாமல் ஆண் குழந்தை வெளியே வந்துள்ளது.

பிறந்த குழந்தைகளைப் படம் பிடிப்பதில் வல்லுநரான பிரபல புகைப்படக் கலைஞர் ஜானா பிராசில், அந்தக் குழந்தையைப் படம் பிடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு ”நோவா” என்று பெயரிட்டுள்ளனர். இதுகுறித்து குழந்தையின் தாயார் வலஸ்கோ கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் எங்கள் குழந்தையின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் நாங்கள் மிகவும் பிரபலம் அடைந்துள்ளோம். என்னுடைய குழந்தை பிறக்கும் போதுஇ என்னால் பார்க்க முடிந்தது. அப்போது நான் மிகவும் அழுதேன். அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகள் ஏதும் இல்லை என்றார்.

இதுகுறித்து பேசிய புகைப்படக் கலைஞர் ஜானா, அந்த ஒரு நிமிடத்தை என்னால் விவரிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு இதேபோல் நீர்க் குடம் உடையாமல் பிறந்த குழந்தைகளைப் படம் பிடித்திருந்தேன். அதற்காக இரு விருதுகள் வென்றேன்.

ஆனால் “நோவா” சற்று ஸ்பெஷல். இவர் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறினார். இதுபோன்ற பிறப்புகள் 80,000 முதல் 90,000 குழந்தைகளில் ஒன்றிற்கு மட்டுமே நிகழும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)