கடந்த 42 நாட்களில் 10 ஆயிரத்து 368 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவவகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டு தொடர்புடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது இவர்களிடமிருந்து ஆயிரத்து 310 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பெப்ரவரி 12 ஆம் திகதி வரை மாத்திரம் ஐய்யாயிரத்து 222 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 224 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)