பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள ‘உல்லால்லா’ பாடல் வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் பேட்ட. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் ரஜினி படமாக ‘பேட்ட’ வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பேட்ட படத்திற்காக ரஜினியுடன் முதன் முறையாக இணைந்துள்ளார் அனிரூத். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் குறையாமால் மாஸ், கிளாஸ், ரொமான்ஸ் என எல்லா வகையான பாடல்களையும் கொடுத்திருந்தார் அனிரூத்.

மரண மாஸ், உல்லால்லா என எல்லா பாடல்களும் ஹிட் அடித்தன. இந்நிலையில் ’உல்லால்லா’ பாடலை சோனி மியூசிக் நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)