வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39 ஏக்கர் காணிகள் இன்று செவ்வாய்க்கிழமை காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி மற்றும் ஒட்டகப்புலம் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த மேற்படி காணிகளே மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகள் விடுவிப்புக்கான அறிவிப்பினை நேற்று முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்தார்.

இதன்படி நேற்று வலி.வடக்கு ஜே.249 தையிட்டி வடக்கு, ஜே.250 தையிட்டி தெற்கு ஆகிய பகுதிகளில் 19 ஏக்கர் காணி விடுவிப்புக்கான சான்றிதழை காங்கேசன்துறை இராணுவ பொறுப்பதிகாரி வலி.வடக்கு பிரதேச செயலரிடம் கையளித்தார்.

(Visited 1 times, 1 visits today)