நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக ஹொங்கொங் நோக்கி சென்ற குழுவினர் இலங்கைக்கு திரும்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 8 ஆம் திகதி இரவு குறித்த மூவரடங்கிய குழுவினர் ஹொங்கொங் நோக்கி சென்றிருந்தனர்.

இந்த குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட அரச இராசயன பகுப்பாய்வாளர் ஒருவரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)