அமைச்சரவையை எதிர்பார்த்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவில்லையெனவும், அமைச்சுப் பதவி வழங்காது போனாலும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதே எமது தீர்மானம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்ற கூட்டம் நிறைவடைந்த பின்னர் வெளியேறுகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த அரசாங்கத்தில் எத்தனை அமைச்சுக்களை தங்களது கட்சி வேண்டியுள்ளது என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சுப் பதவிகள் கேட்டு அரசாங்கத்திடம் எந்தவித கோரிக்கைகளையும் விடுக்கவில்லையெனவும் ரவுப் ஹக்கீம் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)