பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பிறகுஇ பரிசளிப்பு விழாவில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் செய்த காரியம் விமர்னத்துக்கு ஆளாகியுள்ளது.

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. போட்டியின் கடைசி நாளில் 81 ஓவரில் 280 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால், பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கடைசி டெஸ்டில், 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-1 என தொடரையும் கைப்பற்றியது. ஆசிய மண்ணில் நியூசிலாந்து வெல்லும் 5-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். மேலும், 1969-ம் ஆண்டிற்குப்பின், வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.

போட்டிக்கு பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், டெஸ்ட் தொடருக்கான கோப்பையை விளம்பரதாரர் கொடுக்க வருவதற்குள், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அவரே எடுத்துச் சென்றார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து, சகவீரர் வைத்திருந்த பரிசு காசோலையை வாங்கிய கேன் வில்லியம்சன் தூக்கி எறிவதும் அந்த வீடியோவில் உள்ளது. அவரின் இந்த செயலை கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)