அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி மோசமான சாதனை ஒன்றைச் செய்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, புஜாராவின் (123) அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 250 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது. 3-ம் நாள் ஆட்டம் தொடங்கியதும், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் சுருண்டது.

இந்திய அணி 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்க வீரர்கள் முரளி விஜய் 18 ரன்களிலும்இ கே.எல்.ராகுல் 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த, புஜாரா மற்றும் கேப்டன் விராட் கோலி ஜோடி நிதானமாக விளையாடியது. கோலி, 34 ரன்கள் எடுத்திருந்தபோது, நாதன் லியோன் பந்துவீச்சில் ஃபிஞ்ச் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கோலி, 5 ரன் எடுத்தபோது, ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் 10 ரன்கள் எடுத்தபோது, வெளிநாட்டு மண்ணில் கேப்டனாக 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். இந்த சாதனை வரிசையில்,டெஸ்டில் ஒரே பவுலரிடம் 6 முறை விக்கெட்டைப் பறிகொடுத்து மோசமான சாதனையை கோலி செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி உடனான டெஸ்ட் போட்டிகளில், கோலிக்கு சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன் அச்சுறுத்தலாக இருக்கிறார். தற்போது, 6-வது முறையாக கோலி விக்கெட்டை நாதன் லியோன் வீழ்த்தினார்.

(Visited 1 times, 1 visits today)