பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

இதற்கு முன்னர் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாராளுமன்ற அமர்வின் இன்றைய செயற்பாடுகள் குறித்தும், இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்புக்கு குறித்தும் தீர்மானிக்கப்படவுள்ளது.

இதேவேளை இன்றும் பாராளுமன்ற அமர்வினை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)