ஜோதிகா நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஹகாற்றின் மொழி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

நடிகை வித்யா பாலன் நடிப்பில், ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் “தும்ஹாரி சுலு”. திருமணமான பெண் ஒருவருக்கு வானொலியில் சுது-வாக வேலை கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. இந்த படத்தில் வித்யா பாலனின் கணவராக மானவ் கவுல் நடித்திருப்பார்.

இப்படத்தின் ரீமேக்கைத் தமிழில் (காற்றின் மொழி) எடுத்திருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். ஜோதிகா, லீட் ரோல் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஏ.ஹெச்.காஷிப் இசையமைத்துள்ள இதற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார், பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அவ்வப்போது இப்படத்தின் புகைப்படங்கள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வந்தது.

இந்நிலையில் தற்போது ஜோதிகா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஹகாற்றின் மொழி’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

(Visited 1 times, 1 visits today)