அமெரிக்க வாழ் இந்திய மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் பதவிக்கு வந்த அதிபர் ஒபாமாவும் அந்த வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தார்.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார்.

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் நடத்தப்படாததற்கு, நாடாளுமன்ற இடைக்கால தேர்தல், பிரச்சாரம், வாக்கு எண்ணிக்கை போன்றவை காரணமாக கூறப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)