இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பத்னாஹா என்னுமிடத்தில் இருந்து நேபாளம் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள தொழில் நகரமான பிரட்நகர் பகுதியை இணைக்கும் வகையில் 18.1 கிலோமீட்டர் தூரத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 13.1 கிலோமீட்டர் பாதை நேபாளம் நாட்டு நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்தியாவின் செலவில் சுமார் 448 கோடி ரூபாயில் இந்த அகலப்பாதை அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்த புதிய பாதையில் பீகாரில் இருந்து முதல் ரெயில் சேவையின் சோதனை வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இந்திய ரெயில்வே துறையை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் இந்த ரெயிலில் சென்றனர்.

நேபாளம் நாட்டின் மோராங் மாவட்டத்தில் உள்ள கட்டஹரி நிலையத்தை வந்து சேர்ந்தபோது, அங்கே குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இருநாட்டு கொடிகளுடன் காணப்பட்ட இந்த புதிய ரெயிலுக்கு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

(Visited 1 times, 1 visits today)