சின்னத்திரை மூலம் மக்களிடம் பிரபலமான நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

திரைத்துறையைப் போலவேஇ மக்களால் அதிகளவில் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்கள் இடம்பிடித்து வருகின்றன.

அப்படிஇ சின்னத்திரையில் தனது இயல்பான நடிப்பாலும், உடல் மொழியாலும் மக்களின் நன்மதிப்பை பெற்ற நடிகர் விஜயராஜ். இவர் மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனார்.

43 வயதான விஜயராஜ், பழனி இடும்பன் மலைப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இவர் உயிரிழந்த செய்தியை கேட்டு சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவரின் இறப்பிற்கு திரை உலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)