உலகம் முழுவதும் #MeToo  விவகாரம் பெரும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பாலியல் விவகாரத்தில் சிக்கிய 48 பேரை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் 1இ500க்கும் மேற்பட்ட கூகுள் ஊழியர்கள் தங்கள் பணியை துறந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில்இ கூகுளின் வேலையிட கலாச்சாரம்இ பாலியல் அத்துமீறலை கையாளும் விதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 1இ500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளியேற முடிவு செய்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய கூகுள் யு-டியூப் விளம்பரப்பிரிவு மேலாளர் கிளாரா ஸ்டெப்ளடான்இ எங்கள் நிறுவனத்தில் ஆண் – பெண் சமநிலைஇ ஊழியர்களுக்கான மதிப்பு ஆகியவற்றை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதாக கூறினார்.

(Visited 1 times, 1 visits today)