உலக பால் விலையானது இவ்வாண்டு உறுதியான ஆரம்பத்தினை பதிவு செய்துள்ளது. இருப்பினும் அசாதாரண காலநிலையானது பால் உற்பத்திக்கு தடையாகவுள்ளதாக கொள்வனவாளர்கள் கவலையடைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக பால் வர்த்தக விலை சுட்டெண்ணானது 5.9% ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை இவ்வாண்டு இடம்பெற்ற 3 ஏலவிற்பனையின் போது பாலின் விலையானது உயர்வடைந்துள்ளது. நியூஸிலாந்தின் பால் உற்பத்தியானது வீழ்ச்சியடைந்ததனைத் தொடர்ந்து பாலின் விலையானது உயர்வடைந்துள்ளது.

மேலும் பால்மாவின் விலையானது 7.6% ஆகவும் கொழுப்பு நீக்கப்பட்ட பால்மாவின் விலையானது 7.2% ஆகவும் உயர்வடைந்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஏல விற்பனையின் போது 22197 தொன் பாலானது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னர் இடம்பெற்ற ஏல விற்பனையுடன் ஒப்பிடும் போது 4.8% அதிகரிப்பாகும்.

உலகில் பொன்டாராவானது பாரிய பால் உற்பத்தியாளராக உள்ளது. நிலவும் வரட்சியானது காலநிலைக்கு அமைய 2017/18 நிதியாண்டில் நியூஸிலாந்தின் பால் சேகரிப்பானது வழக்கத்திற்கு மாறாக அமையும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஒரு சில பால் உற்பத்தி நிறுவனங்கள் தமது பால்மா மற்றும் பிற பால் சார்ந்த உற்பத்தியை சீன வர்த்தகர்களை மையப்படுத்தி விற்பனை செய்கின்றன.

(Visited 120 times, 1 visits today)