தேசிய லொத்தர் சபையானது 1963 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஐந்து தசாப்த காலமாக தனது செயற்பாடுகளை வெற்றிகரமான முன்னெடுத்துச் செல்கிறது. நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் வெற்றி பெறச் செய்யும் வகையில் செயற்படுவது நாட்டின் அபிவிருத்திக்கு மிகுந்த சக்திவாய்ந்த நிறுவனமாக திகழ்கிறது.

கடந்த வருடம் அரசின் வருமானத்திற்கு 1881 மில்லியன் ரூபா வழங்கியதோடு பரிசுத் தொகையாக 3213 மில்லியன் ரூபா தேசிய சிறுநீரக உதவித் தொகையாக 104 மில்லியன் ரூபா சமூக ரீதியான செயற்பாடுகளுக்காக 31 மில்லியன் ரூபாவையும் தேசிய லொத்தர் சபையினால் வழங்கப்பட்டதோடு சுப்பர் பரிசு வென்றவர்கள் மாத்திரம் 43 பேர் ஆவர்.


தேசிய லொத்தர் சபையின் செவன லொத்தர் சீட்டின் மூலம் இருவர் வீடுகளை வெற்றி கொண்டதுடன் மஹஜன சம்பத லொத்தரில் 3 கோடி 93 இலட்சம் ரூபா மெனா பவர் லொத்தரின் 3 கோடி 61 இலட்சம் ரூபா நீரோகா லொத்தரில் 54 இலட்சம் ரூபா மற்றும் சுபிரி கொவிசெத முதலாவது சீட்டிழுப்பில் டொயோட்டா வீகோ கார் 9 எயார்போட் சுப்பர் ட்ரோ லொத்தரில் 32 ஆவது வாரத்தில் 200 இலட்சம் ரூபா அண்மித்த பென்ஸ் வகையைச் சேர்ந்த மோட்டார் வாகளம் செவன மற்றும் மஹஜன சம்பத விசேட சீட்டிழுப்பு வாரங்களில் 2 மோட்டார் வாகன வெற்றியாளர்களுக்கு பரிசுகள் அண்மையில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பரிசளிப்பு நிகழ்வானது தேசிய லொத்தர் சபையின் தலைவர் சட்டத்தரணி சியாமளா பெரேரா தலைமையில் நடைபெற்றதோடு செயற்பாட்டுப் பணிப்பாளர் துசித ஹல்லொளுவ, பணிப்பாளர் சீ.என்.விஜேவர்தன, பணிப்பாளர் சுதத் லொகுலியனகே, தேசிய லொத்தர் சபையின் முகாமையாளர் சுனில் குணவர்தன, மேலதிக முகாமையாளர் பிரபாத் சந்தியதேஜ, பிரதான காசாளர் ஹர்ஷ பண்டார உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

(Visited 323 times, 1 visits today)