கடந்த ஜனவரி 31 ஆம் திகதியன்று ஏற்பட்ட ப்ளூ ரெட் மூன் எனும் அரிய விண்வெளி நிகழ்வின் போது நிலவின் அருகே எதோ பறப்பது போன்றும், நிலவை அந்த மர்மமான பறக்கும் பொருள் கண்காணிப்பது போன்றும் வீடியோ ஒன்று வெளியாக பரபரப்பு ஏற்பட்டது.

அது எக்ஸ்டராடெர்ரஸ்ட்ரியல்ஸ் எனப்படும் ஏலியன்கள் அல்லது வேற்றுகிற வாசிகள் என்ற வார்த்தைகள் வெளியானதும் அந்த பரபரப்பு ஒரு பீதியாக மாறியது.

அது உண்மையாகினும் சரி அல்லது போலியான வீடியோவாக இருந்தாலும் சரி, கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் ஏலியன்கள் பூமிக்கு வருவதொன்றும் புதிதல்ல மற்றும் முதல் முறையும் அல்ல.என்ன நம்ப முடியவில்லையா.? இதோ ஆதாரங்கள்.

16ஆம் நூற்றாண்டில் பெயர் அறியப்படாத ஓவியர் வரைந்த ஒவியத்தில் மடோனா தன் குழந்தை செயின்ட் ஜான் இடம் பெற்றுள்ளனர். பின்னணியில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு ஒன்றும் வரையப்பட்டுள்ளது. இச்சம்பவம் யுஎஃப்ஒ ஆர்வலர்கள் மத்தியில் ஏலியன் இருப்பதை உணர்த்தும் ஆதாரமாக பார்க்கப்படுகின்றது.

உண்மையில் அந்த படத்தில் வரையப்பட்டது என்ன என்பது மர்மமாகவே இருக்கும் நிலையில் இந்த உருவமானது வானத்தில் இருந்து தேவதை வருவதை உணர்த்துவதாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

கிஸா பிரமிட் கட்டுமானம்

பண்டைய காலங்களின் உலகின் ஏழு அதிசயங்களில் மிகவும் பழமை வாய்ந்ததாக இருப்பது காஸா பிரமிட் ஆகும். இதன் கட்டுமானம் முழுமையாக முடிக்க சுமார் இருபது ஆண்டுகளாகி இருக்கலாம் என கூறப்படுகின்றது. 2560 களில் கட்டமைக்கப்பட்டதாக அறியப்படும் கிஸா பிரமிட் எகிப்தியர்கள் எந்தளவு அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியிருப்பார்கள் என்ற கேள்வியை எழுப்புகின்றது.

காஸா பிரமிட் கட்டிட கலை நுணுக்கங்களை கொண்டு பார்க்கும் போது இது நிச்சயம் அதிநவீன தொழில்நுட்ப உதவி இல்லாமல் கட்டமைத்திருக்க முடியாது என யுஎஃப்ஒ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது அமைப்புகளானது இது நிச்சயம் வேற்றுகிரக வாசிகளால் கட்டமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.

டோகு

14,000 மற்றும் 400 கிமு காலக்கட்டத்தின் போது ஜப்பானில் செதுக்கப்பட்ட சிறிய ரக சிலைகள் தன் டோகு. சுமார் 10 சிமீ முதல் 30சிமீ வரை உயரமாக இருக்கும் டோகு களிமண் மூலம் வடிவமைக்கப்பட்டு பார்க்க மினிதர்களை போன்று இருக்கும்.

இந்த சிலைகள் ஏன் வடிக்கப்பட்டன என்பதற்கான காரணங்கள் தொலைந்து விட்டன.
இச்சிலைகள் மனித உருவம் கொண்டவைகள் ஏதோ மண்டை ஓடுகளை அணிந்து கொண்டிருப்பதால் இவை விண்வெளி ஆடையாகவும் இருக்கலாம், என்றும் இவை ஏலியன்களை பார்த்த பின் வடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

நெப்போலியன் போனபார்ட் மைக்ரோசிப்

இத்தாலியின் முதல் அரசரான நெப்போலியன் ஏலியன்களால் கடத்தப்பட்டார் என கூறப்பட்டு வந்தது. இதோடு 1997 ஆம் ஆண்டில் நெப்போலியன் மண்டை ஒடினுள் அரை இன்ச் அளவு கொண்டு மைக்ரோ சிப் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக மருத்துவர் ஆண்ட்ரி டுபோயிஸ் தெரிவித்தார்.

மேற்கொண்டு நெப்போலியனின் மண்டை ஒடினை ஆய்வு செய்ததில் கண்டெடுக்கப்பட்ட மைக்ரோசிப் நெப்போலியன் உடலில் சிறு வயதிலேயே வைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும் 1794 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெப்போலியன் மர்மமான முறையில் காணாமல் போனது அவர் ஏலியன்களால் கடத்தப்பட்டார் என்ற கூற்றிற்கு கூடுதல் பலம் சேர்த்தது.

நாஸ்கா கோடுகள்

பெரு நாட்டின் நாஸ்கா பாலைவனத்தில் காணப்படும் நாஸ்கா கோடுகள் சுமார் 500 கிமு ஆண்டுகளில் வரையப்பட்டதாக அறியப்படுகின்றது. இந்த கோடுகளின் அளவு மற்றும் வடிவம் பல்வேறு அர்த்தங்களை கொண்டதாக அறியப்படுவதோடு இவை நாஸ்கா கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.

தரையில் இருந்து முழுமையாக பார்க்க முடியாத இந்த கோடுகள் வானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெளிவாக தெரியும். இதன் காரணமாக இவை ஏலியன் வாகனங்கள் பூமியில் தரையிறங்க வரையப்பட்டிருக்கலாம் என யுஎஃப்ஒ ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
லொஸ் ஏஞ்சல்ஸ் பறக்கும் தட்டு பசிபிக் கடல் வழியாக எதிரிகள் தாக்க கூடும் என்ற ஆபத்தை முன் நிறுத்தி 1942 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் சைரன் எழுப்பப்பட்டு முழு நகரமும் இருளில் மூழ்கடிக்கப்பட்டது.

பின் அதிகாலை சுமார் 3 மணிக்கு வானத்தில் மர்மமான பறக்கும் தட்டு பறந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடையாளம் தெரியாத அந்த பறக்கும் தட்டை நோக்கி காலை 7.12 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்த புகைப்படங்களில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் ஏலியன்கள் பூமிக்கு வந்ததை உறுதி செய்யும் விதமாக அமைந்தது.

விமானாஸ்

இவை இந்து புராணங்களில் பண்டைய கால பறக்கும் வாகனமாக கருதப்படுகின்றது. இவைகளில் விளக்குகள் மற்றும் அதிபயங்கர ஆயுதங்கள் இருக்கும் எனவும் இந்து புத்தகங்கள் மற்றும் சமஸ்கிருத குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

விமானாஸ் கொண்டு கடவுள் மற்றும் சாத்தான்கள் பூமிக்கு வந்து சென்றதை இவை குறிப்பதாக பண்டைய ஏலியன் நம்பிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அபோரிஜினல் வாண்ட்ஜினா

அபோரிஜினல் நம்பிக்கைகளில் வாண்ட்ஜினா என்ற பெயர் கொண்ட ஆவிகள் வானத்தில் இருந்து வந்து, உலகத்தினை உருவாக்கியதாக கூறப்பட்டுள்ளது. இவை பேய் போன்று காட்சியளிக்கும் என்றும் வெள்ளை நிற முக அமைப்புகளும் கருப்பு கண்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

வாண்டஜினா குறித்த கதைகள் பொய் என நம்பப்பட்டாலும் இவைகளின் உருவம் பார்க்க ஏலியன் போன்று இருப்பதாகவும் இவை நிச்சயம் வேற்று கிரக வாசிகள் என்றே யுஎஃப்ஒ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமேரியன் நாகரீகம்

தற்போதைய ஈராக் பகுதியில் சுமார் 4,500 கிமு காலங்களில் வாழ்ந்ததாக சுமேரியன் நாகரீகம் அறியப்படுகின்றது. இவர்கள் அதிநவீன விவசாய முறைகள் சார்ந்த தொழில்நுட்பங்கள், எழுத்து மற்றும் கணிதம் போன்றவைகளை கண்டுபிடித்ததாக அறியப்படுகின்றனர்.

ப்ளூட்டோ கண்டறிவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுமேரியன் நாகரீகத்தினருக்கு கடவுள் அதிநவீன அறிவினை வழங்கியதாகவும், விவசாயம் செய்வோராக சுமேரியன்கள் கடவுளிடம் பணியாற்றியதாகவும் சதியாலோசனை கோட்பாடுகள் இருக்கின்றன. மேலும் வானத்தில் இருந்து வேற்றுகிரக வாசிகள் யுஎஃப்ஒ மூலம் பூமிக்கு பயணித்ததாகவும் நம்பப்படுகின்றது.

(Visited 562 times, 1 visits today)