ஜப்பான் விஞ்ஞானிகள் தயாரித்துள்ள ரோபோ ஒன்று, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிய உள்ளது.

ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோபாடிக் ஆய்வகத்தில், வரவேற்பாளர் வேலைக்காக ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டது. இதனை, ஆய்வக இயக்குனர் ஹிரோஷி இசிகுரோ உருவாக்கினார்.

அதன் பின்னர், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களுடன் உரையாடும் திறன், மனப்பாடம் செய்யும் திறன் கொண்டதாக இந்த ரோபோ மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த ரோபோவை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பயன்படுத்த விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இந்த ரோபோ பார்ப்பதற்கு, 23 வயது பெண் தோற்றத்தில் உள்ளது.

இது, மனிதர்களைப் போல கண் இமைக்கும் திறன் கொண்டது. மேலும் இதன் முகம், கழுத்து, தோள்பட்டை மற்றும் இடுப்பு ஆகியவற்றை, விருப்பத்திற்கு ஏற்ப அசைக்கும் தன்மை கொண்டது. எனினும், இதன் கைகளை மட்டும் அசைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 138 times, 1 visits today)