வரும் ஏப்ரல் மாதம் இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் 2 விண்கலம் நிலவுக்கு ஏவப்படும் என்று விண்வெளி ஆராய்ச்சி துறைக்கான மத்திய அரசின் பொறுப்பாளர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போத பேசிய அவர், இஸ்ரோ நிறுவனம் தனது சந்திரயான் 2 விண்கலத்தை வரும் ஏப்ரல் மாதம் நிலவுக்கு ஏவும் என்றும், இந்த விண்கலம் நாசாவின் அப்போலோ விண்கலத்தை விட சக்திவாய்ந்த விண்கலம் என்றும் தெரிவித்தார்.

மேலும், சந்திரயாண் 2 திட்டம் மூலம் நிலவன் தென் துருவத்தில், ரோவர் வாகனத்தை தரையிறக்க இந்தியா முதன்முறையாக முயற்சி செய்யவுள்ளதாகவும், இது உலக அரங்கில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, இஸ்ரோவின் புதிய தலைவர் சிவன் கூறுகையில், நிலவின் தென் துருவத்தில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த பாறைகள் இருக்கிறது என்றும், அதை ஆராய்ச்சி செய்வதால், உலகம் எப்போது தோன்றியது என்பது குறித்த விபரங்கள் தெரிவதற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

சந்திரயான் 2 திட்டமானது, 800 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 17 times, 1 visits today)