அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 16 வயது பிரிவிற்கு உட்பட்டோருக்கான உதைபந்தாட்டப் போட்டி இலங்கை கல்வி அமைச்சினால் நடத்தப்பட்டது.
இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, குருநாகல் அல் ஹுமர் மத்திய கல்லூரியுடன் மோதி 4:3 என்ற ரீதியில் இவ்வாண்டுக்கான சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
கடந்த மாதம் அநுராதபுரத்தில் நடைபெற்ற கால் இறுதிக்கு முந்திய ஆட்டத்தில் புனித பத்தரிசியார் கல்லூரி அக்கரைப்பற்று  பொத்துவில் மத்திய கல்லூரியை 2:1 என்ற கோல் கணக்கிலும் காலிறுதிப் போட்டியில் கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்தை 3:2 என்ற கோல் கணக்கிலும் அரையிறுதி ஆட்டத்தில் கம்பொல விக்ரமபாகு தேசிய பாடசாலையை 1:0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் இணுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றனர்.
கொ ழும்பில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் குருநாகல் அல் ஹுமர் மத்திய கல்லூரியுடன் மோதிய புனித பத்திரிசியார் கல்லூரி போட்டி நேரத்தின் முடிவில் 2:2 என்ற சமநிலையில் வெற்றி தோல்வியின்றி முடிவைடந்தது. இதையடுத்து சமநிலை தவிர்ப்பு போட்டி நடத்தப்பட்டது. இதில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இவ்வாண்டுக்கான 16 வயதுப் பிரிவின் உதைபந்தாட்ட சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
(Visited 1 times, 1 visits today)