வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வெய்ன் பிராவோ. 35 வயதான இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். அவர் கடைசியாக 2014-ம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.

பிராவோ டெஸ்டில் 2,200 ரன்னும், 86 விக்கெட்டும் எடுத்தார். ஒரு நாள் போட்டியில் 2968 ரன்னும், 199 விக்கெட்டும், 20 ஓவரில் 1142 ரன்னும், 52 விக்கெட்டும் எடுத்தார்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவார்.

(Visited 1 times, 1 visits today)