ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குபட்ட சில வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மதியம் 12.30 மணி முதல் கிரிக்கெட் போட்டி நிறைவுபெறும் வரை, டொக்டர் பிரிட்டோ பபாபுள்ளே வீதி மற்றும் கெத்தாராம ஆகிய வீதிகளிலேயே போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

அதேவேளை, ஶ்ரீ சத்தர்ம மாவத்தை முதல் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கு வரையிலும், டொக்டர் பிரிட்டோ பபாபுள்ளே வீதியின் கிரேண்ட்பாஸ் வீதி வரையிலுமே வாகனங்கள் பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)