முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா இன்று மீண்டும் குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது அவரிடம் 9 மணி நேர வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான கொலை முயற்சி சதி திட்டம் தொடர்பில் நாலக்க டி சில்வாவிடம் வாக்கு மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)