உலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில்  மிக வேகமாக ரோபோக்களை பெரு நிறுவனங்கள் பணியமர்த்தி வருகின்றன.

உலகில் பணியிடங்களில் அதிக ரோப்போக்களை பணியமர்த்தியுள்ள நாடுகள் பட்டியலில் தென் கொரியா முதலிடத்தில் உள்ளது.

சராசரியாக 10,000 பணியாளர்களுக்கு 631 ரோபோக்களை தென் கொரியாவில் பணியமர்த்தப்பட்டுள்ளன.

தென் கொரியாவை அடுத்து, சிங்கப்பூர், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிகளவில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உலகளவில் சராசரியாக 10,000 பணியாளர்களுக்கு 74 ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் சராசரியாக 10,000 பணியாளர்களுக்கு 3 ரோபோக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளன.

(Visited 1 times, 1 visits today)