முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசியல் பயணத்தில் குட்டுக்கள் வாங்குவதில் சிக்கல் இல்லையெனவும், அவர் குட்டுவதற்கு தகுதியானவர் எனவும் கூட்டு எதிரணியிலுள்ள சிரேஷ்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட கூட்டத்தில், குமார வெல்கமவுக்கு பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் சிலரினால் விமர்ஷனங்கள் முன்வைக்கப்பட்டமை குறித்து வினவிய போதே குமார வெல்கம எம்.பி. இதனைக் கூறினார்.

என்னுடைய கருத்தை நான் கூறிக் கொண்டே தான் இருப்பேன். எனது தலைவர் குட்டினால் அதனைத் தடவிக் கொள்வேன். அதற்காக கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர கூட்டு எதிரணியில் வேறு தலைவர் ஒருவர் இல்லையென்பதே என்னுடைய கருத்தாகும்.

தனக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு மஹிந்த ராஜபக்ஷ போன்று பிரபலம் கிடையாது. அவ்வாறு நான் பிரபலம் அடையும் போது எனது வயது அதற்கு இடம்கொடுக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

(Visited 1 times, 1 visits today)