பிரிட்டனை சேர்ந்த இளம் ஜோடி தேனிலவுக்கான இலங்கை வந்துள்ளனர். அப்போது அவர்கள் குடிபோதையில் தங்கள் தங்கியிருந்த ஹோட்டலை விலைக்கு வாங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சுவாரஷ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த ஜினா யோன்ஸ், மார்க் லீ தம்பதியினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தங்களது தேனிலவை கொண்டாட இலங்கைக்கு வந்துள்ளனர்.  ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர்கள், அளவு கடந்து குடித்த நிலையில் அந்த ஹோட்டலின் குத்தகை காலம் முடிந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆண்டுக்கு 10 ஆயிரம் பவுண்ட் மட்டுமே என்பதால் அந்த ஹோட்டலை அவர்கள் மூன்று ஆண்டுக்கு குத்தகைக்கு வாங்குவது என முடிவு செய்துள்ளனர். மொத்தம் உள்ள தொகை 30 ஆயிரம் பவுண்ட்டில்   பாதியை இப்போது கொடுத்துள்ள ஜோடி, மீத தொகையை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் செலுத்துவதாகவும் போதையில் நியாயமாக கூறியுள்ளனர்.

தேனிலவு கொண்டாட வந்து ஹோட்டலை சொந்தமாக்கி கொண்ட ஜினா யோன்ஸ், மார்க் லீ தம்பதியினர் தங்களின் பெயரையே அந்த ஹோட்டளுக்கு வைத்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)