திருநங்கையாக இருந்து ஆணாக மாறிய ஹாரிசன் மாஸ்ஸியின் வாழ்க்கை பயண புகைப்படங்கள் ஒரு பார்வை…!

அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் வசித்து வருபவர் ஹாரிஸன் மாஸ்ஸி. இவர் உடலாலும் மனதாலும் பெண்ணாக இருந்து  வருபவர். இவர் கடந்த சில வருடங்களாக தன்னை திருநம்பியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, தனது ஏழு வருட விடாமுயட்சியால் தற்போது திருநம்பியாக மாறியுள்ளார் ஹாரிசன் மாஸ்ஸி. இவர் தன்னுடன் பெண் நண்பராக இருந்த ஹெவனுக்கு இடையே இருந்த உறவுமுறை பற்றியும், அதனால் அவர்கள் சந்தித்த கடினமான பிரச்னைகள் குறித்தும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸில், ஹாரிஸன் மாஸ்ஸி மற்றும் சாண்ட்ரா சந்தித்துக்கொண்டனர். இது எனக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. எனக்கும் சாண்ட்ராவுக்கும் உள்ள உறவுமுறை ஆரோக்கியமானது. அவர் என்னுடைய வாழ்க்கைத் துணை மட்டுமல்ல. நாங்கள் இருவரும் நெருங்கிய நாண்பர்கள். என் வாழ்க்கையே சாண்ட்ராதான்” என்று கூறினார்.

மேலும், இவர் திருநம்பியாக மாறிய ஹாரிஸன் மாஸ்ஸி, ‘என் வாழ்க்கை அழகானது, அதிர்ஷ்டவசமானது. முற்பிறவிப் பயனால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். ஏன்னென்றால் என்னைப்போல் திருநங்கையாகவும் திருநம்பியாகவும் மாறியவர்கள் எதிர்க்கொண்ட கஷ்டங்களை நான் அனுபவிக்கவில்லை. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நான் திருநம்பியாக மாறியபின்னும் என்னுடன் உள்ள நண்பர்களும்  உறவினர்களும் என் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்கிறார் ஹாரிசன். இவரது புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது…!

(Visited 1 times, 1 visits today)