விஜய் ஆண்டனி நடிப்பில் உறுவாகியுள்ள திமிரு பிடிச்சவன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது!

‘நம்பியார்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் கணேஷா இயக்கத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் ‘திமிரு பிடிச்சவன்’.

விஜய் ஆண்டனி-க்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். ஃபிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தை தயாரிக்க, விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

‘நான்’, ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’, ‘எமன்’ உள்ளிட்ட விஜய் ஆண்டனியின் வித்தியாசமான பெயர் கொண்ட திரைப்படங்கள் வரிசையில் தற்போது இத்திரைப்படமும் ‘திமிரு பிடிச்சவன்’ என்ற வித்தியாசமான தலைப்புடன் வெளிவருகிறது.

இத்திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. ‘சர்கார்’, ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளிவரும் நிலையில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்!

(Visited 1 times, 1 visits today)