மோகன்லால்-ன் “ஒடியன்” திரைப்பட அதிரடி ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மாருபட்ட தோற்றத்தில் நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ஒடியன். இதிரைப்படத்தில் இளம் நாயகனாக நடிக்கின்றார் நம் மோகன் லால், இதற்காக இவர் 15 கிலோ எடை வரை குறைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான இப்படத்தின் டீஸரில் மலையாள சூப்பர் ஸ்டார் லால் மிகவும் மெலிந்து, இளமையான தோற்றத்தில் தோன்றினார். இதனால் ரசிகர்களிடையே பெறும் எதிர்பார்ப்பினை இப்படம் ஏற்படுத்தியது.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் கூறுகையில்… லால் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து 18-கிலோ வரை குறைத்துள்ளார், மேலும் இதற்காக அவர் பிரான்சை சேர்ந்த யோகா மற்றும் தோல் மருத்துவர்களின் உதவியை நாடி உடற்பயிற்சி மேற்கொண்டு தனது இலக்கை அடைந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கான படப்பிடிப்புகள் பாலக்காடு, கோவை, பொள்ளாச்சி, ஹைதராபாத், வாரணாசி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. கண்கவர் காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்தினை தர காத்திருக்கின்றது என்பது உன்மை…

(Visited 1 times, 1 visits today)