பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘தாம் தூம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து அவர் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்தியில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். தற்போது கங்கனா வட இந்திய ராணியான ’மணிகர்னிகா’ படத்தில் ராணியாக நடித்து வருகிறார்.

கங்கனா நடிப்பில் வெளியான படம் ‘குயின்’. இந்தப் படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை விகாஸ் பகால் இயக்கியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் விகாஸ் பகால் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என்று நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘நான் கொஞ்சம் கடுமையானவர் என்பதால் என்னிடம் அவர் நெருங்க பயப்படுவார். ஆனாலும், நட்பாக என்னை கட்டிப்பிடிக்கும் போது கூட மிக இறுக்கமாக தான் கட்டிப் பிடிப்பார். என்னை மட்டுமல்ல எல்லாப் பெண்களையும் அவர் அப்படித்தான் இறுக்கமாக கட்டிப்பிடிப்பார். அவர் மேல் புகார் கொடுத்த ஒரு பெண்ணிற்கு நான் ஆதரவு தந்ததால்இ அவர் இயக்கவிருந்த ஒரு படத்திலிருந்து கூட என்னை தூக்கினார், அது பற்றி எல்லாம் எனக்கு துளிக்கூட கவலையில்லை’’ என்றார் கங்கனா.

(Visited 1 times, 1 visits today)