’சண்டக்கோழி’ படத்திற்காக நடிகர் விஷால் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் சின்னத்திரையில் புதிதாக நிகழ்ச்சி ஒன்றின் மூலம் களமிறங்கியுள்ளார். அதற்கு ‘சன் நாம் ஒருவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் முதல் எபிசோட் மிகவும் மனதை உருக்கக்கூடிய வகையில் நடந்து முடிந்துள்ளது. அதில் நடிகர் கார்த்தியும் இணைந்தது சிறப்புக்குரியது. இந்த நிகழ்ச்சியில் பெலிக்ஸ் என்ற 18 வயது சிறுவன் குறித்த விஷயம் முக்கியத்துவம் பெற்றது. எலக்ட்ரிக் ஷாக் மூலம் தனது இரு கைகளையும் இழந்தவர்.

புதிதாக கைகளைப் பொருத்திக் கொள்ள ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி தோசை சுட்டு, ரூ.1 லட்சம் நிதி திரட்டினார். மேலும் தனது பாக்கெட்டில் இருந்து ரூ.50,000 தொகையை வழங்கினார்.

இதேபோல் நடிகர் விஷால் திரைத்துறையில் இருக்கும் தனது நண்பர்கள் மூலம் ரூ.2 லட்சம் திரட்டினார். சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி ரூ.2 லட்சம் வழங்குவதாக அறிவித்தது. இதன்மூலம் மொத்தம் ரூ.6 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)