வரவு- செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டு ஒரு மாதத்தின் பின்னரேயே வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்பது பாராளுமன்ற சம்பிரதாயம் என்பதனால், நவம்பர் 5 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நேற்று வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் முன்வைத்தால் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரே வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். நவம்பர் 5 ஆம் திகதி ஆகும் போது ஒரு மாத காலத்தை அடையாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(Visited 1 times, 1 visits today)