சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறுக் கோரி 10 இலட்சம் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையில் பொதுபல சேனா ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களைக் கொண்டு மனு ஒன்றைத் தயாரித்து, அதனை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)