முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை டிசம்பர்  4ம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் தொடர் விசாரணை செய்வதற்கு விஷேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)