சர்ச்சைகளின் நாயகன் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அடுத்த படைப்பில் வெளியாகவுள்ள அடுத்த தமிழ் படம் பைரவா கீதா.

பெரும்பாலும் சர்ச்சைகளின் நாயகன் என்றழைக்கப்படுபவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. டுவிட்டரிலும் சரி, படங்கள் எடுப்பதிலும் சரி சர்ச்சையை ஏற்படுத்தக் கூடியவர். இவரது படங்களில் ரொமான்ஸ், கேங்க்ஸ்டர், த்ரில்லர் ஆகியவற்றிற்கு பஞ்சமிருக்காது. இந்த நிலையில், அறிமுக இயக்குனர் சித்தார்த் தத்துல் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் பைரவா கீதா. இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலானது.

இப்படத்தில் புதுமுக நடிகர் தனஞ்ஜெய் மற்றும் இராமோர் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். ஜாதி பிரச்சனையை மையமாக கொண்ட காதல் கதையை இப்படம் சித்தரிக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் 26ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)