கால்பந்து உலகின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 20 நாட்களில் ஆஜராக வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா, 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த போது, ரொனால்டோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை மறைக்க ரூ. 3 கோடி வரை தருவதாக பேரம் பேசியதாகவும் புகார் அளித்தார்.

உலகளவில் இந்த விவகாரம் அனலை கிளப்ப, மாடல் அழகி கொடுத்த புகாரின் அடிப்படையில் லாஸ்வேகாஸ் போலீஸார் விசாரணையை தொடங்கினர். அதன்படி, லாஸ்வேகாஸ் நீதிமன்றம் ரொனால்டோ 20 நாட்களில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.

ஆனால் இந்த புகாரை முற்றிலுமாக மறுத்துள்ளார் வீரர் ரொனால்டோ. இது பொய்யான குற்றச்சாட்டு எனவும், தனது நற்பெயரை கெடுக்க இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பாலியல் புகாரை சட்டப்படி அணுகவுள்ளதாகவும், இதுபோன்ற பொய்குற்றச்சாட்டுகள் இனி ஏற்படாத வகையில் இந்த வழக்கை தான் அணுகவுள்ளதாகவும் ரொனால்டோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)