நடிகை பிந்து மாதவி, படு கவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்..

நடிகை பிந்து மாதவி, தமிழில் ‘வெப்பம்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து ‘கழுகு’, ‘கேடிபில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ உட்பட பல படங்களில் நடித்தார். தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை பிந்துமாதவி எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாக நடித்தது கிடையாது .‘ஜாக்சன் துரை’ படத்திற்கு பிறகு நடிகை பிந்து மாதவியை கோலிவுட் பக்கம் காணவில்லை.

தமிழில் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு முகம் காட்டிய நடிகை பிந்து மாதாவி இழந்த தனது மார்கெட்டை பிடித்துள்ளார்.

தற்போது பிந்து மாதவி, ‘புகழேந்தி என்னும் நான்’, ‘கழுகு 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் நடிகை பிந்து மாதவி கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)