சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘சர்கார்’. இது முருகதாஸ் – விஜய் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகிறது.

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ‘சிம்டாங்காரன்’ சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியாகி உள்ளது. படத்தின் பெயா் சா்காா் என்று வைக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து அதற்கு தகுந்தவாறு உணா்ச்சியை தூண்டும் வகையில் வரிகள் இடம் பெற்றுள்ளன. காலை முதலே இதற்கான டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில் 17 மணிநேரத்தில் 3 மில்லியன் பார்வைகளை தாண்டியதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஹ்மான் இசையமைத்து அவரே பாடியிருந்தார். பாடல் வரிகளுக்காக பாடலாசிரியர் விவேக்கிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சா்காா் படத்தின் ஒருவிரல் புரட்சி வெளியாகியுள்ள நிலையில், ஒருவிரல் புரட்சி வைரல் புரட்சியாக மாறட்டும் என்று நடிகா் சித்தாா் கருத்து தொிவித்துள்ளாா். இதே போன்று எழுத்தாளா் கபிலன் வைரமுத்து, “நிஜமான வரிகள் நெஞ்சின் வரிகள் வாழ்த்துகள் விவேக்” என்று பாடலாசிரியா் விவேக்கை பாராட்டியுள்ளாா்.

இதற்கு முன்னதாக, சிம்டாங்காரன் என்ற பாடலும் வெளியாகி பெரிய மாஸ் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 1 times, 1 visits today)