பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும், அவருடைய காதலர் பாப் பாடகரான நிக் ஜோனாஸூம், கிரிக்கெட் வீரர் தல தோனியும் கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா (35). அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் கூட. பாலிவுட்டைத் தொடர்ந்து கோலிவுட், ஹாலிவுட் என்று அசத்தியுள்ளார்.

நிச்சயதார்த்தம்:
பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் நடிக்கும் போது, அவருக்கும் பாப் பாடகர் நிக் ஜொனாஸ்க்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவீட்டரின் சம்மதத்துடன் ஆகஸ்ட 18ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.

நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, ஊர் சுற்றியும் வருகின்றனர்.

https://www.instagram.com/p/BoWgzakjJwb/?taken-by=viralbhayani

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை உணவகத்தில் சென்ற தோடு, நிக் ஜோனாஸ் நேற்று கால்பந்து விளையாடவும் செய்தார். இதில் சிறப்பு அம்சமாக நிக் ஜோனாஸ், கிரிக்கெட் வீரர் தல தோனியும் ஒரே மைதானத்தில் சேர்ந்து கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.

தோனியுடன் பாலிவுட் நடிகர்களான ஆதித்யா ராய் கபூர், இஷான் கோட்டர், குனாம் கெம்மு, டினோ மோரே, ஷபீப் அலுவாலியா மற்றும் பலரும் விளையாடி மகிழ்ந்தனர்.

(Visited 1 times, 1 visits today)