பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்நிய முதலீடு தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

இதில் குவைத்தை சேர்ந்த குழு ஒன்று, பாகிஸ்தானில் முதலீடு செய்வது குறித்து அந்நாட்டு நிதித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இது முடிந்த சிறிது நேரத்தில் குவைத் குழுவில் இடம்பெற்ற ஒருவரின் பர்ஸ் காணவில்லை என புகார் கூறப்பட்டது.

இதையடுத்து பேச்சுவார்த்தை நடந்த அறையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிர சோதனை நடத்தினர். பர்ஸ் கிடைக்காததால் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அங்கு பதிவான காட்சிகளில், பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர் அங்கும், இங்கும் பார்த்துவிட்டு யாரும் இல்லையென உறுதிசெய்து, குவைத் நாட்டு அதிகாரிகள் அமர்ந்திருந்த மேஜை மீது இருந்த பர்ஸை திருடிச்சென்றது பதிவாகியிருந்தது.

இருதரப்பு பேச்சுவார்த்தை அடுத்து, அனைவரும் விருந்துக்காக வெளியே சென்றபோது பர்ஸை திருடியது பாகிஸ்தான் முதலீட்டுத்துறை செயலாளர் ஜரார் ஹைதர் கான் என்பது தெரியவந்தது.

அவர் திருடிவிட்டு ஒன்றும் நடக்காதது போல் அவர் செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பாகிஸ்தானுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான செய்தியை பாகிஸ்தானின் டான், சாமாடிவி போன்ற ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுடன் வைரலாகி வருகிறது.

(Visited 1 times, 1 visits today)