மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழில் அதன்பின் நடிக்காவிட்டாலும்  தெலுங்கில் பிசியாக வலம் வருகிறார். இந்தியிலும் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

பொதுவாக தமிழ் நடிகைகள் தெலுங்கு சினிமா பக்கம் செல்லும்போது கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை. துவாடா ஜெகநாதம், ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடல் ஆகியவற்றில் கவர்ச்சியாக நடித்திருந்த பூஜா ஹெக்டே, ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் அரவிந்த சமேதா படத்தில் பிகினி உடையில் நடித்துள்ளார்.

இந்த செய்தி பரவிய பின்னர் பூஜா ஹெக்டேவை தேடி தமிழ் வாய்ப்புகள் செல்ல தொடங்கி உள்ளன. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் மும்மொழிப் படத்திலும் பூஜா நடித்து வருகிறார். இந்தப் படத்தை கே.கே.ராதாகிருஷ்ணன் இயக்க, யுவி கிரியே‌ஷன்சுடன் இணைந்து கோபி கிருஷ்ணா தயாரிக்கிறார்.

(Visited 1 times, 1 visits today)