ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடுவெல தொகுதிக்கான இணை அமைப்பாளர்களாக ஜி.எச். புத்ததாச மற்றும் ஹெக்டர் பெத்மக ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து 5 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, லக்ஷமன் யாப்பா அபேவர்தன, சந்திம வீரக்கொடி ஆகியோர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)