கடந்த 2017-ஆம் ஆண்டு உலகளாவிய பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசிய நாடுகளில் நடைபெற்றுள்ளதாகவும்  பயங்கரவாத வன்முறை காரணமான உயிரிழப்புகள் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உலக அமைதி மற்றும் நாடுகளின் ஸ்திரதன்மைக்கு மிகப்பெரும் சவாலாக பயங்கரவாதம் திகழ்கிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள் பெருமளவு தொகையை செலவழித்து வருகிறது.

இருப்பினும் அவற்றை கட்டுப்படுத்துவது அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் இணைந்து “தகவல் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவதற்கும்  விமானப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும், கடுமையான சட்ட அமலாக்குதலில் பல வெற்றிகளை கண்டாலும்  2017 -ஆம் ஆண்டில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் மிகவும் சிக்கலாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில்  பயங்கரவாத தாக்குதல் குறித்து அமெரிக்கா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2017-ஆம் ஆட்டில் 100 நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. இதில், 70 சதவீத உயிரிழப்புகள் ஆப்கானிஸ்தான், ஈராக், நைஜீரியா, சோமாலியா, சிரியா ஆகிய நாடுகளில் மட்டும் நடைபெற்றுள்ளது.

உலக அளவில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசியா நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், பிலிப்பைன்ஸ் மட்டுமே நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பாயங்கரவாத தாக்குதல்கள் 23 சதவீதம் குறைந்துள்ளதாகவும், பயங்கரவாத தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகள் 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

(Visited 1 times, 1 visits today)