நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரும் சியான் விக்ரமின் சாமி 2 ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள சாமி படத்தின் 2ம் பாகமான சாமி 2 நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம், த்ரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான் சூப்பர் டூப்பர் ஹிட் படம் சாமி. இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் 2ம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது.

மேலும், நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. ஹரி இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், பிரபு, பாபி சிம்ஹா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஜான் விஜய், சூரி, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, சுமித்ரா, உமா ரியாஸ் கான், டெல்லி கணேஷ் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து புது மெட்ரோ ரயில் என்ற பாடலை பாடியுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)