ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டானி வில்ஸை திருமணம் செய்துள்ளார் இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..!

நியூ சவுத் வேல்ஸ்  பெர்னியாவில் உள்ள பிக்ச்சர்ஸ்யூ பென்டூலே எஸ்டேட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், காதலி டானி வில்ஸ் திருமணம் செய்து கொண்டனர். ஆறு ஆண்டுகள் ஒன்றாக இருந்த ஸ்மித் – வில்ஸ் ஜோடிக்கு, கடந்த ஆண்டு நிச்சியதார்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் வில்ஸை கரம்பிடித்தார் ஸ்மித்.
இவர்களது திருமண கொண்டாட்டத்தில், உறவினர்கள், நண்பர்கள் உள்பட நாதன் லியொன், உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ், மொய்சஸ் ஹென்றிக்ஸ், பேட் கம்மின்ஸ், பீட்டர் நெவில், ஆரோன் பின்ச் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது..!

(Visited 1 times, 1 visits today)