படக்குழு மீது நம்பிக்கை இருந்ததால் படுக்கை அறை காட்சியில் நடித்தேன் என்று நடிகை சாந்தினி கூறியுள்ளார்.

மனோஜ் பீதா விநாயக் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ‘வஞ்சகர் உலகம்’. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் படத்தில் அனிஷா அம்புரோஸ், சாந்தினி, ஹரிஸ் பெரடி உட்பட பலர்நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை மஞ்சுளா பீதா, பிரசன்னா ஜேகே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நடிகை சாந்தினி, படுக்கை அறை காட்சியில் மிகவும் துணிச்சலாக நடித்துள்ளார். இந்தக் காட்சியில் நடித்ததுப் பற்றி நடிகை சாந்தினி கூறுகையில் ‘‘வஞ்சகர் உலகம்’ படத்தின் கதையை இயக்குனர் மனோஜ் என்னிடம் கூறினார். மேலும் படத்தில் ஒரு கவர்ச்சியான படுக்கை அறை காட்சி இருப்பதாகவும் சொன்னார். அவர் என்னிடம் இரண்டு மணி நேரம் கதை சொன்னார்.

அப்போதுதான் அவர் மீதும்  அந்த படக்குழுவினர் மீதும் எனக்கு நம்பிக்கை வந்தது. படத்தில் என்னுடைய கேரக்டர் மீது படம் பார்ப்பவர்களுக்கு அனுதாபம் ஏற்படும் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் அந்த காட்சியில் நடிக்க சம்மதித்தேன். நான் எதிர்பார்த்தது போலவே ‘வஞ்சகர் உலகம்’ படத்தில்  என் கேரக்டர் மக்களிடம் பேசப்பட்டது’’ என்றார்.

(Visited 1 times, 1 visits today)