”இன்றைய சமஷ்டி என்பது வெறுமனே பெயரளவில் நின்றுவிடாமல் எல்லாவகையான அரசியலமைப்பு  முறைமைகளுக்குள்ளும் விஸ்தீரண மடைந்துள்ளது. ஆகையால் சமஷ்டியென்பது வெறுமனே பெயரால் மட்டும் வர்ணிக்கப்படும் ஒரு ஆட்சிமுறையாக இருக்கமுடியாது. மாறாக ஒரு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கத்தை ஆராய்கின்ற போது சமஷ்டியின் அடிப்படைக் குணாதிசயங்கள் காணப்படுமாக இருந்தால் அதற்கு என்ன பெயர் கொடுத்தாலும், பெயரே கொடுக்காவிட்டாலும் அது சமஷ்டி ஆட்சி முறையாகவே இருக்கும்.”

இவ்வாறு கூறுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்  சனிக்கிழமை மாலை இடம்பெற்ற சி.வை.தாமோதரம்பிள்ளையின் நினைவு தினத்தை முன்னிட்டு ”இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்” என்ற தலைப்பில் நடத்திய நினைவுப் பேருரையின் போதே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். சுமந்திரன் தனது நினைவுப் பேருரையில் தெரிவித்தவை வருமாறு:

இன்றைய பேருரைக்கான தலையங்கம் சமஷ்டி பற்றியது. இச் சொல் ”federal” என்கின்ற ஆங்கிலச் சொல்லைக் குறிக்கிறதாக தமிழிலே உபயோகிக்கப்பட்டு வந்திருந்தாலும் அது வட மொழி சார்ந்த ஒரு சொல்லாகும். பொருத்தமான தமிழ் சொல் இல்லையென்றாலும் கூட்டாட்சி அல்லது இணைப்பாட்சி என்ற சொற்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. சமஷ்டியை தனது அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற இலங்கை தமிழ் அரசு கட்சியும் சில வருடங்களுக்கு முன்னர் எமது யாப்பிலே காணப்படும் வட சொற்களை தமிழ் சொற்களாக மாற்றிய போது சமஷ்டியை இணைப்பாட்சி என்று மாற்றியிருந்தோம். இந்த மாற்றத்தை எமது கொள்கையில் ஏற்படுத்திய மாற்றமாக குற்றம் சுமத்தி, பிரிவினையைக் கோருவதாகச் சொல்லி எமக்கெதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விபரங்களை நான் பின்னர் எடுத்துக் கூறுவேன். ஆனால் தற்போதைக்கு இவ் உரையில் சமஷ்டி என்ற சொற் பிரயோகத்தையே நான் உபயோகிக்கப் போகிறேன்.

சமஷ்டியை கொள்கையாகக் கொண்ட ஒரே அரசியல் கட்சி இலங்கை தமிழ் அரசுக் கட்சி. ஆனால் ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய அடிப்படைக் கொள்கையாக அது இன்று பரிணமித்திருக்கிறது. எழுபது வருட சுதந்திர சரித்திரத்தில் பல்வேறு தமிழ் கட்சிகள் வெவ்வேறு கொள்கைகளை முன்வைத்திருந்தாலும் கூட அனைத்துக் கட்சிகளும் இன்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாப்பில் உள்ள கொள்கையே தமது கொள்கையென்று ஏற்றுக்கொண்டுள்ளன. இப்படியான சந்தர்ப்பத்தில் சமஷ்டி ஆட்சி முறை என்றால் என்னவென்பதைத் தெளிவாக வரையறுத்துக் கூற வேண்டியது இலங்கை தமிழ் அரசுக் கட்சியினுடைய கடமையென்று நான் கருதுகிறேன்.

சமஷ்டியென்ற அரசியல் கோட்பாட்டிற்கு குறித்தவொரு வரைவிலக்கணத்தைக் கொடுப்பது இயலாத விடயம். துல்லியமான குறித்த வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுக்க முடியாவிட்டாலும் அதனுடைய வரையறைகளையும் விஸ்தீரணத்தையும் சற்று விளக்கமாக முன்வைப்பதே இப் பேருரையின் நோக்கமாகும்.

சமஷ்டி ஆட்சிமுறை இருப்பதாகக் கூறப்படுகிற ஏதேனும் இரண்டு நாடுகளுடைய ஆட்சிமுறைகள் ஒரே மாதிரியாக இருப்பதாகக் காணமுடியாது. ஆனாலும் சமஷ்டியினுடைய சில அடிப்படைப் பண்பியல்புகள் ஒரு குறித்த நாட்டின் ஆட்சி முறையில் இருக்கின்றதா இல்லையா என்று பரிசீலித்து பார்க்க முடியும். A V Dicey என்கின்ற மிகப் பிரபலமான அரசியல் அறிவியலாளருடைய கருத்துப்படி சமஷ்டி என்பது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பிராந்தியங்கள் அரச அதிகாரங்களை கையாள்வதற்கும் இடையிலான நடுநிலையைப் பேணுகின்ற ஒரு அரசியல் ஒழுங்கமைபாகும். அவருடைய கருத்துப்படி சமஷ்டியின் அடிப்படை குணாதிசங்களாவன:

1. அரசியலைப்பு சட்டத்தினுடைய மீயுயர் தன்மை
2. வெவ்வேறு அரச அதிகாரங்களை சமமானதும் மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பது
3. அரசியலமைப்பு சட்டத்திற்கான வியாக்கியானம் கொடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு வழக்கப்படுத்தல் என்பதாகும்

இதேபோன்று K C Wheare என்கின்ற அறிஞரின் கூற்றுப்படி சமஷ்டி அரசியலமைப்பு என்பது அரசாங்கத்தின் வெவ்வேறு மட்டங்களுக்கு பிரித்துக்கொடுக்கப்படும் அதிகாரங்களின் மீது அவை ஒவ்வொன்றும் பூரணமான அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.

Ronald Watts, பொதுவான அரசாங்கமும் பிராந்திய சுயாட்சி அலகுகளும் ஆட்சியதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளும் முறை என்று சமஷ்டியை வர்ணித்திருக்கின்றார். இவர் சமஷ்டி என்பது, அதிகார அலகுகள் ஒன்றிலிருந்து மற்றது தன்னுடைய அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளாமல் நேரடியாகவே அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நேரடியாகவே இறைமையினடிப்படையில் பெற்றிருக்க வேண்டுமென கருத்துரைத்திருக்கிறனர்.

Wattsனுடைய சமஷ்டி கோட்பாட்டை எமது அரசியலமைப்புச் சட்ட நிபுணர் ரொஹான் எதிரிசிங்க பின்வரும் கூறுகளாகக் காண்பித்திருக்கிறார்.

1. பிரஜைகள் மீது நேரடியாக அதிகாரம் செலுத்தும் தகைமையுள்ள இரண்டு அரசாங்க அமைவுகள்: சில சுயாதீனங்களை உள்ளடக்கிய சட்டவாக்கள் மற்றும் நிறைவேற்றதிகாரங்களும் நிதி வளங்களையும் இவ்விரு அரசாங்க அமைவுகளிடையே சட்டபூர்வமாக பகிர்ந்து கொள்ளும் ஒரு முறைமை.

2. மத்திய கொள்கைவகுப்பு நிறுவனங்களில் பிராந்தியங்களின் அபிப்பிராயங்களையும் பெற்றுக்கொள்ளுதல். இது மத்தியிலிருக்கும் இரண்டாம் (மேல்) சபைக்கு பிராந்தியங்கள் / மாகாணங்கள் தமது பிரதிநிதிகளை அனுப்புவதன் மூலம் செயற்படுத்தலாம்.

3. ஓர் எழுதப்பட்ட தன்னிச்சையாக மாற்றப்படமுடியாத மீயுயர் அரசியலமைப்புச் சட்டம்

4. மத்திக்கும் மாகாணகளுக்குமிடையிலான சர்ச்சைகளை தீர்க்கும் ஒரு நடுநிலையாளர்

5. மத்தியும் மாகாணங்களும் சேர்ந்து கையாளுகின்ற பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான பொறிமுறை

இந்தக் குணாதிசயங்களின் அடிப்படையில்தான் 13ம் திருத்தச்சட்டத்தில் இருக்கும் குறைபாடுகளை தன்னுடைய பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

13ம் அரசியலமைப்பு திருத்தம் 1987ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது அத் திருத்தம் இலங்கையின் ஆட்சி முறையை ஒற்றையாட்சியிலிருந்து சமஷ்டி ஆட்சிமுறைக்கு மாற்றிவிடுமென்று குற்றஞ்சாட்டி பலர் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தனர். அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாம் உறுப்புரை இலங்கையை ஓர்

(Visited 1 times, 1 visits today)